×

தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டையில் பொங்கல் கரும்பு சாகுபடி பணி

வல்லம், மே7: தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டை பகுதியில் பொங்கல் கரும்பு சாகுபடி பணிகளை விவசாயிகள் மும்முரமாக தொடங்கி உள்ளனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடப்பது வழக்கம் மேலும் கரும்பு, வாழை, வெற்றிலை, வெள்ளரிக்காய், உளுந்து, எள், மக்காச்சோளம், பூக்கள் போன்றவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதில் முக்கிய இடத்தை பொங்கல் கரும்பு பிடிக்கிறது.தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, திருவோணம், வெட்டிக்காடு, மாரியம்மன்கோவில், சாலியமங்கலம், கம்பர்நத்தம், குளிச்சப்பட்டு, ராராமுத்திரைக்கோட்டை, வாளமரக்கோட்டை, சூரக்கோட்டை என மாவட்டம் பல பகுதிகளில் பொங்கல் கரும்புகள் நடவு செய்யப்படுவது வழக்கம். பொங்கல் கரும்புகள் வழக்கமாக ஏப்ரல் கடைசி வாரம் மற்றும் மே மாதங்களில் நடவு செய்யப்படும். ஏனெனில் இந்த காலக்கட்டத்தில் நடவு செய்தால்தான் ஜனவரி மாதத்தில் அறுவடை செய்ய முடியும். தற்போது பொங்கல் கரும்பு நடவுப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டையில் விதைக்கரும்புகள் தயார் செய்யும் பணிகளிலும் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கரும்பு 10 மாத பயிராகும்.

இப்போது நடவு செய்தால் தான் பொங்கல் பண்டிகை தினத்திற்கு விற்பனை செய்ய தயாராக இருக்கும். 1 ஏக்கர் பரப்பளவுக்கு 15 ஆயிரம் துண்டு விதைக்கரும்பு தேவைப்படும். தற்போது தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டை பகுதியில் விதைக்கரும்புகள் நடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பொங்கல் கரும்பு சாகுபடி செய்யும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்த கரும்பு 10 மாத பயிராகும்.
இப்போது நடவு செய்தால் தான் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அறுவடை செய்யப்படும். கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முழுகரும்பு வழங்கப்பட்டது. அதனால் இந்தாண்டு பொங்கல் கரும்பு சாகுபடி கூடுதலாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.

The post தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டையில் பொங்கல் கரும்பு சாகுபடி பணி appeared first on Dinakaran.

Tags : Surakottai ,Thanjavur ,Vallam ,Thanjavur district ,Tamil Nadu ,
× RELATED வல்லம் பேரூராட்சியில் சட்டத்திற்கு...